மன்னார் மாவட்டத்தில் கடைகள் உடைப்பு அதிகரிப்பு..... வர்த்தகர்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் கடைகள் உடைப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.........
கடந்த மாதம் மட்டும் 10 அதிகமான கடைகள் உடைத்து சுமார் 75000-200000 வரையான பொருட்கள் பணம் திருடப்பட்டுள்ளது அதுவும் மக்கள் புழக்கம் உள்ள பிரதான வீதிகளில் உள்ள கடைகளில் தான்.
அதுவும் நூதனமான முறையில் கடைகள் உடைப்பதில்லை ஒற்றைக்கதவினை மட்டும் திறந்து போகின்றார்கள் பூட்டுக்கள் யாவும் காணாமல் போகின்றது அதே நேரம் சத்தமின்றி உடைக்கப்படுகின்ற பூட்டுக்கள்(உடைக்கப்படுவதில்லை ஹாஸ் கொண்டு வெட்டி எடுக்கின்றார்கள் பூட்டுக்கள் யாவும் கொண்டு சென்று விடுகின்றார்கள்)
இது எவ்வாறு சாத்தியமாகும் இரவகளில் ரோந்துப்பணியில்
- பொலிசார் கடமையில் இருக்கின்றார்கள்
- புலனாய்வு அதிகாரிகள் இருக்கின்றார்கள் அத்தோடு பிரதானமாக இரவு நேரக்காவலர்கள் இருக்கின்றார்கள் அப்படி இருந்தும் எவ்வாறு
களவுகள் ஏற்படக்காரணம்
- தற்போதைய விலையேற்றம்-நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாக இருக்கலாம்.
- வேலையில்லாத்திண்டாட்டம்-வியாபாரம் செய்யும் அதிகமான வெளிமாவட்ட வியாபாரிகள்
- மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு
- சோம்பேறிகளின் உருவாக்கம் அதிகம்
- வேறுமாவட்டங்களில் இருந்து வரும் திட்டமிட்டகுழுக்கள்
- நமது மாவட்டத்திலே உள்ள குழுக்கள் இவ்வாறு பலவாறான விடையங்களினால் திருட்டுச்செயற்பாடுகள் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரித்துள்ளது.
- (தெரிய வந்தவைதன் தெரியாமல் எவ்வளவோ.....)
இழந்தவர்கள் படும்துயரம் யாருக்கு தெரியும்......
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன்.........
களவுசெயற்பாடுகள் எப்படி செய்கின்றார்கள் பாருங்கள்
- ஹாஸ் கொண்டு பூட்டுக்கள் உடைக்கப்படுகின்றது
- மயக்கமருந்து பாவித்தல்
- பவுடர் தூவுதல்
- பகலில் உளவுபார்த்து இரவில் கைவரிசையை காட்டுதல்
- போதைப்பொருளின் பாவனை
- கொலை மிரட்டல்
களவுசெயற்பாடுகள் எவ்வாறு தவிர்க்கலாம்
- மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிளின் கவனத்திற்கு திருட்டுக்கும்பலை பிடியுங்கள்.
- மன்னார் பிரதேச சபை நகரசபை அதிகாரிகளின் கவனத்திற்கு வீதிகளில் இருள் சூழ்ந்திருக்கும் அனைத்து பகுதிகளிலும் மின்குமிழ்களைப்பொருத்துங்கள் வீதிகளில் வளர்ந்திருக்கும் கொடிகள் மரங்கள் குப்பைமேடுகள் போன்ற வற்றினை துப்பரவு செய்யுங்கள்.
- மின்சார சபை அதிகாரிகளுக்கு மின்சாரத்தினை தங்கு தடையின்றி வழங்குங்கள்.
- பொதுமக்களின் கவனத்திற்கு உங்களது வளவுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துங்கள் இருண்ட பகுதிகளில் மின்குமிழ்களை ஒளிர விடுங்கள்
- குடியிருப்பற்ற காணிகளின் இனம்தெரியாதவர்களின் செயற்பாடுகள் அவதானியுங்கள்
- இளைஞர்களே இந்த திருட்டுக்கும்பலை இல்லாதொழிக்க நீங்கள் தான் முன்வரவேண்டும் திருடர்களை இனங்கண்டு அவர்களை தண்டிப்பதன் மூலம் பல பாரியவிளைவுகளை தடுக்கலாம். முன்வாருங்கள்…
- CCT-காமெராவினை பொருத்தி திருட்டுக்கும்பலை கைது செய்யலாமே
நிம்மதியின்றி தூக்கம் இன்றி தவிக்கும் வர்த்தகர்கள் மக்களின் வாழ்வுக்கு தீர்வுதான் என்ன……..
மன்னாரின் நடக்கும் அனைத்து தவறான செயற்பாடுகளையும் முடிவு......
-மன்னார்விழி-
மன்னார் மாவட்டத்தில் கடைகள் உடைப்பு அதிகரிப்பு..... வர்த்தகர்கள் பாதிப்பு
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment