அண்மைய செய்திகள்

recent
-

உங்க குழந்தையும் புத்திசாலியாக வேண்டுமா...


மூளை, இதுதான் உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர். வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை.
குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாய் கருவுற்ற 3 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. எனவே மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான உணவுகளைக் கர்ப்பக்காலத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்
  • வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால் முட்டையில் உள்ள புரோட்டீன் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் பொருள் மூளை வளர்ச்சியை அதிகரித்து குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.
  • தினமும் வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால் குழந்தகைளுக்கு கொடுத்து வருவது அவர்களின் மூளைக்கு மிகவும் நல்லது.
  • காலை அல்லது மாலை வேளையில் தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
  • குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான உணவுகளில் முக்கியமானது ஓட்ஸ். ஓட்ஸ் குழந்தைகளின் உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் ஆரோக்கியத்தை தரும்.
  • ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.
  • பீன்ஸில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் காணப்படுவதால் அதனை குழந்தைகளுக்கு அளிப்பது மிகவும் நல்லது.
  • குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் தக்காளி லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் இவை மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குகின்றன.
  • பூசணி விதைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. எனஅவ குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதற்கு, பூசணி விதைகளை கொடுக்க வேண்டும்.
  • பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது
  • ஆளி விதையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல கொழுப்புக்களான ALA அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்து கொடுத்து, உடலையும் மூளையின் செயல்பாட்டையும் சீராக இயங்கச் செய்யலாம்.
உங்க குழந்தையும் புத்திசாலியாக வேண்டுமா... Reviewed by Author on August 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.