அண்மைய செய்திகள்

recent
-

அக்குளில் தொடர் அரிப்பா......?


உடலில் அதிகம் வியர்வை வெளியாகும் அக்குளில் சிலருக்கு கடுமையான அரிப்புகள் ஏற்படும்.

இது சிவப்பு அல்லது கருமை நிறத்தில் காணப்படுவதோடு, தோல் உரிய ஆரம்பித்து கடுமையான துர்நாற்றமும் வீசும்.
இதனை போக்க சில இயற்கை வழிகளை பார்ப்போம்.
அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
  • உடலின் சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பது. இதனால் உடலில் சொறி சிரங்கு, படை, படர்தாமரை போன்ற பாதிப்புகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • தவறான கருவி மற்றும் தவறான முறையில் ஷேவ் செய்வதால், அக்குளின் நிறமே மாறி கருமை படர்ந்து விடும்.
  • சுகாதாரமற்ற துவைக்காத அழுக்கு படிந்த ஆடைகளை அணிவதால் அது அக்குள் மற்றும் உடலின் பிற பாகங்களில் அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • உடலில் ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அதைக் குணப்படுத்த உண்ணும் மருந்துகள் மூலமாக உடலின் பல பாகங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
  • தினசரி பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு, உடல் சுகாதாரம், உடை சுகாதாரம் போன்றவற்றின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு உடலில் அரிப்பு ஏற்படலாம்.
அக்குளில் உண்டாகும் அரிப்பை போக்குவது எப்படி?
  • ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் வைத்து மடித்து, அதை அரிப்பு ஏற்படும் அக்குளில் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் கலந்து, அதில் காட்டன் பயன்படுத்தி அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு 3-4 முறைகள் செய்ய வேண்டும்.
  • ஒரு கைப்பிடி வேப்பிலையை ஒரு பாத்திர நீரில் போட்டு, 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அந்த நீரால் தினமும் 2-3 முறை அக்குளைக் கழுவ வேண்டும்.
  • பேக்கிங் சோடாவுடன் நீர் கலந்து, அந்த நீரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் பேக்கிங் சோடாவை அக்குளில் 2 நிமிடங்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
  • 1 டீஸ்பூன் சுத்தமான ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் நீரில் கலந்து, அரிப்புள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அதை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வர, அக்குள் அரிப்பு நீங்கும்.
அக்குளில் தொடர் அரிப்பா......? Reviewed by Author on August 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.