அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸ்-லாகூர்னெவ் சிவன் ஆலயம் தொடர்பில்-பகிரங்க அறிவித்தல்-சிவஶ்ரீ-கணேச சிவசுத குருக்கள் -படங்கள்


அனைவருக்கும் வணக்கம்.........

பிரான்ஸ் - லாகூர்னெவ் சிவன் ஆலயம் தொடர்பில், யாழ் ஊடக மையத்தில் வைத்து திருவாளர் வெற்றிவேலு ஜெயேந்திரன் அவர்களினால் கூறப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஆலய குருக்கள் என்ற அடிப்படையிலும் நிர்வாகரீதியிலும் இத்தால் விளக்கத்தை தருகின்றோம்.

சிவன் ஆலயம் தொடர்பில் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது மட்டுமன்றி, அவைகள் சிவ பக்தர்களதும், ஆலய தொண்டர்களதும் மனங்களை காயப்படுத்தியுள்ளது.
ஆலய குருக்கள் என்ற வகையில் என்மீதும், நிர்வாக ரீதியாகவும் அவர்கள் குறிபிட்ட விடயங்கள் ஆலயத்தின் நற்பெயருக்கும், எனது இறைபணிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆலயம் தங்குதடை இன்றி வழமை போல் தனது இறைபணியை செய்து வருகின்றது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இந்த ஆலயத்தை தொடக்கத்தில் உருவாக்கியவர் திரு.வெற்றிவேலு ஜெயேந்திரன் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆலயத்தை உருவாக்கிய போதும் நாம் எல்லோரும் இணைந்தே உருவாக்கினோம்.

ஆனால் பிரான்சின் சட்டத்துக்கு புறம்பான தகாத நடவடிக்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய காரணங்கள் ஊர் அறிந்த உண்மை.
அவரது தனிப்பட்ட நடத்தைகளுக்கு அப்பால், ஆலயத்தின் வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியிலும் ஆலய குருக்களாகிய நானும், என்னோடு இணைந்திருந்த பணியாளர்களும், பக்தர்களும்தான் காரணம் ஆவோம்
இன்று பெருந்திரளான பக்தர்களின் ஆலயமாக இது இருக்கின்றது எனில் அதற்கு நாம் கடைப்பிடித்திருந்த ஆன்மீக செயற்பாடுகளே ஆகும். அவர் விரும்புகின்றது போல் பணச்சுரண்டலுக்காக நாம் ஆலயத்தை நடத்தியிருந்தால் இத்தனை பக்தர்கள் ஆலயம் பெற்றிருக்காது.

பிரான்சின் சட்டங்களுக்கு உட்பட்டே ஆலயம் இயங்கி வருகின்றது. ஆலயத்தின் மீது குற்றங்கள் காணப்படின் அதனை பிரான்சின் சட்டங்களுக்கு உட்பட்  ஆலய நிர்வாகம் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றது.

யாழ் ஊடக மையத்தில் இருந்து ஆலயத்தின் மீதும், இறைபணியாளர்கள் மீது சேறு பூசுவது பொருத்தமான ஒன்றல்ல என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
“அஞ்சுவதும் அடி பணிவதும் அப்பன் ஈசன் ஒருவனுக்கே”

நன்றி

இவ்வண்ணம்
சிவஶ்ரீ-கணேச சிவசுத
குருக்கள் - சிவன் ஆலயம்
லாகூர்னெவ் - பிரான்ஸ்
 













பிரான்ஸ்-லாகூர்னெவ் சிவன் ஆலயம் தொடர்பில்-பகிரங்க அறிவித்தல்-சிவஶ்ரீ-கணேச சிவசுத குருக்கள் -படங்கள் Reviewed by Author on August 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.