அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பெண்ணின் செயலைக் கண்டு காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்!


இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை வாஜ்பாய் காலமானார்.
இவரின் மரண செய்தியைக் கேட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் அவர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து 12 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை.
இவர் கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்.

இதற்காக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் திகதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாயின் கையால் சின்னப்பிள்ளை பெற்றார்.

இன்று வாஜ்பாயின் மரண செய்தியைக் கேட்டு வேதனையடைந்த சின்னப்பிள்ளை, என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய்.
அப்போது அவர் திடீரென எனது காலில் விழுந்து விட்டார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று இருந்த போது, அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்.
அந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழ் பெண்ணின் செயலைக் கண்டு காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய்! Reviewed by Author on August 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.