தமிழ் மக்களுக்காக பெருந்தொகை நிதி வழங்கிய பிரித்தானியா!
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்குடியேற்றங்களுக்காக பிரித்தானியா, 7.9 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் பிரச்சினைகளுக்கான பாதுகாப்பு மற்றும் நிலையான நிதியின் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது
இந்த நிதியுதவி, 2016ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 7.9 மில்லியன் பவுண்ட்ஸ்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் படையினரால் விடுக்கப்பட்ட காணிகளில் 600 குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளன.
இதனைதவிர இன்னும் 1 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவிகள் எதிர்காலத்தில் அடிப்படை வசதி மேம்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நிதியின் மூலம் மீள்குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலைமைகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் உதவும் என்று பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்
அத்துடன் தமது இந்த திட்டத்துக்கு பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த இலங்கையர்களும் உதவுவர் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்காக பெருந்தொகை நிதி வழங்கிய பிரித்தானியா!
Reviewed by Author
on
August 16, 2018
Rating:
Reviewed by Author
on
August 16, 2018
Rating:


No comments:
Post a Comment