சீனாவில் 10,000 தியேட்டர்களில் வெளியாகும் விஜயின் மெர்சல்
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’.
விஜய் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு என்று முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
ஜி.எஸ்.டி வரி மற்றும் பணமதிப்பிழப்பு பற்றி பேசப்பட்டதால் சர்ச்சைகளுக்குள்ளானது. ரசிகர்களின் ஆதரவுடன் படம் பெரும் லாபம் ஈட்டியது. ‘மெர்சல்’ ரிலீசான போது வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
‘மெர்சல்’ படத்தை சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன. சீனாவில் மொத்தம் 40,000 தியேட்டர்களுக்கு மேல் இருக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்கள், பாலிவுட் படங்கள் என உலக சினிமா அனைத்தும் சீன சினிமா மார்க்கெட்டை குறிவைத்தே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அதே பாணியைப் பின்பற்றி, இப்போது ‘மெர்சல்’ திரைப்படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி. ஏற்கெனவே இந்தியாவில் தயாரான தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி அதிக வசூலை குவித்தன.
அமீர் கானின் ‘தங்கல்’, ஹசீக்ரட் சூப்பர் ஸ்டார்’ படங்களை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட திரைப்பட நிறுவனத்தின் மூலமாக ‘மெர்சல்’ படத்தை டப்பிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 6-ம் தேதி, ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.
சீனாவில் 10,000 தியேட்டர்களில் வெளியாகும் விஜயின் மெர்சல்
Reviewed by Author
on
September 13, 2018
Rating:
Reviewed by Author
on
September 13, 2018
Rating:


No comments:
Post a Comment