மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்- தொடர்சியாக கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்-(படம்)
மன்னார் 'சதோச' வளாகத்தில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வோறு கட்டமாக செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.
தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்க்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது. இன்று புதன் கிழமை (12) 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
விசேட சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் இன்று புதன் கிழமை (12) அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இன்று (12) புதன் கிழமை அகழ்வு பணிகளுக்கு அமைவாக தற்போதைய நிலையில் 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
அத்துடன் குறித்த புதை குழி பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்- தொடர்சியாக கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்-(படம்)
 Reviewed by Author
        on 
        
September 12, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 12, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 12, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 12, 2018
 
        Rating: 



 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment