அண்மைய செய்திகள்

recent
-

வெகு வேகமாக உலகத்தை நெருங்கும் பேரழிவு... 2030 குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை -


உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது.

மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகமாகும். அதேபோல் தொழிற்சாலை புகை மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு சென்றால் பூமியின் வெப்பநிலை வெகு வேகமாக உயர்வடைந்து 2030இல் உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று ஐ.நாவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்துள்ளது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளை கரைத்துவிட்டது.
இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்கக் கூடிய அளவு வெப்பநிலை ஆகும்.
இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள முக்கிய பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும்.
இதனால் உலகில் 8 - 10 சதவிகிதம் மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும்.
இது கண்டிப்பாக 2030க்குள் நடந்துவிடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
வெகு வேகமாக உலகத்தை நெருங்கும் பேரழிவு... 2030 குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை - Reviewed by Author on October 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.