30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா!
அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்துள்ளார்.
அப்போது அவர் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல் ஒன்றைப் பற்றி ஆராயும் படி கூறியுள்ளார். சுமார் 10 கிலோ எடை கொண்ட அந்த கல்லை மோனாசிர்பெஸ்சும் ஆராய்ந்து பார்த்துள்ளார். ஆராய்ந்து பார்த்ததில் இந்த கல் ஒரு வினோதமான விண்கல் என்பதை அவர் அறிந்துள்ளார். இருப்பினும் இதை அவர் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கும் இது விண்கல் என்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதை விலை கொடுத்து வாங்கவும் அவர்கள் முன்வந்துள்ளனர்.
பெரும்பாலான விண்கற்களில் 90 சதவீத முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால் இதில் 88 சதவீதம் இரும்பும், 12 சதவீதம் நிக்கலும் இருப்பது தான் இந்த கல்லின் சிறப்பு அம்சமே ஆகும். இதன் மதிப்பு தற்போது 1 லட்சம் அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 1,69,65,500 கோடி ரூபாய்) ஆகும்.
இந்த கல் 1930-ஆம் ஆண்டு அதாவது 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் விளைநிலத்தில் விழுந்துள்ளது.
இந்த வினோதமான விண்கல்லை அந்த நபர் தனது வீட்டின் கதவு அசையாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்தார்.
தற்போது விண்கல் என்று தெரிந்த நிலையில் அதை விற்க பெயர் வெளியிடப்படாத உரிமையாளர், விண்கல் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மிக்சிகன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா!
Reviewed by Author
on
October 08, 2018
Rating:
Reviewed by Author
on
October 08, 2018
Rating:


No comments:
Post a Comment