தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 79 வீதமானவர்கள் சித்தி
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 79.09 வீதமானவர்கள் சித்தி அடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் இது 69 வீதமாக காணப்பட்டதுடன், இந்த ஆண்டு பத்து வீதத்தினால் பரீட்சையில் சித்தி அடைந்தோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
வினாத்தாள் ஒன்று மற்றும் வினாத்தாள் இரண்டு ஆகியனவற்றில் 35 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக் கொள்ளும் அனைவரும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த ஆண்டில் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்து நூற்றி தொன்னூற்று ஒரு மாணவ, மாணவியர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இதேவேளை, மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகளை விடவும் அதிகளவு புள்ளிகளை பரீட்சைக்குத் தோற்றிய 10.32 வீதமான மாணவ, மாணவியர் பெற்றுக் கொண்டுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 79 வீதமானவர்கள் சித்தி
 Reviewed by Author
        on 
        
October 08, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 08, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 08, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 08, 2018
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment