மன்னார் மாற்றுத் திறன் உடையோருக்கு கையடக்க தொலைபேசி திருத்தும் பயிற்சி....
மன்னார் மாவட்ட சமுகசேவை திணைக்களத்தினால் மாற்றுத் திறன் உடையோருக்கு மன்னார் உயிலங்குளத்தில் இருக்கும் மாவட்ட சமுகசேவை திணைக்களத்தில் தியாக திலிபனின் நினைவுதினமான 26 திகதி அகவணக்கத்துடன் ஆரம்பமான கையடக்க தொலைபேசி திருத்தும் பயிற்சி நொறியானது கடந்த 05 நாட்களாக நடைபெற்ற சிறப்பான முறையில் 30-09-2018 நிறைவு பெற்றது.
பயிற்சி பெற தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கான இப் பயிற்சியை மாற்றுத் திறன் உடைய சமுகத்தில் பலராலும் மதிக்கத்தக்க மனிதநேயம் உடைய பயிற்சி ஆசிரியர் பாசத்துக்குரிய பொன்கலன் அவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சியில் இருந்து வருகைதந்து 5 நாட்களும் எமக்காக மன்னாரில் தங்கியிருந்து இப் பயிற்சி நெறியை வழங்கியிருந்தார்.
இப் பயிற்சிக்கு பொறுப்பாக மாவட்ட சமுகசேவை உத்தியோகஸ்தர் மதிப்புக்குரிய திருமதி மரியப்பிள்ளை அவர்கள் எம்மோடு இருந்து எமக்கான சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்தார்கள்.
நாம் கற்றுக்கொண்ட இந்தப் பயிற்சி நெறியானது எமது வாழ்வுக்கு எம்மை ஊக்குவிக்கும் ஓர் அங்கமாக விளங்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை . இறுதி நாளான 30-09-2018 அன்று எமது பயிற்சி ஆசிரியர் திரு.பொன்கலன் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி இப் பயிற்சி நிறைவு நிறைவு பெற்றது.
பயிற்சியில் ககலந்து கொண்டவர்களுக்கான 10000ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி திருத்தும் உபகரணங்கள் வரும் வாரங்களில் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாற்றுத் திறன் உடையோருக்கு கையடக்க தொலைபேசி திருத்தும் பயிற்சி....
Reviewed by Author
on
October 01, 2018
Rating:

No comments:
Post a Comment