தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது! அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் -
அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் வாணி விழா நிகழ்வில் இன்று ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும்.
எங்களுடைய சமூகம் குறிப்பாக இளம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றார்கள், பல குடும்பங்களில் எழுதப்படாத விவாகரத்துகள் எழுதப்பட்டுகொண்டிருக்கின்றன.
பிள்ளைகள் தற்கொலைக்கு தங்கள தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், சமூகம் ஆன்மீகத்தில் இருந்து விடுப்பட்டு சென்றுக்கொண்டிருக்கின்றது. திருநீறு பூசிய முகங்களை காண்பது அரிதாக இருக்கிறது.
நவீன உலகில் பெற்றோர்கள் சதா வேலைப்பளுவுடன் இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை முறையாக கவனிக்க முடியாது போகின்றது.
இந்நிலைமைகள் கவலையளிக்கிறது. இதுவொரு ஆபத்தான நிலைமை. சத்தமில்லாமல் தமிழ் சமூகத்தை அழிக்கின்ற யுத்தம் இவ்வாறே இடம்பெற்று வருகின்றது” என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது! அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் -
Reviewed by Author
on
October 18, 2018
Rating:
Reviewed by Author
on
October 18, 2018
Rating:


No comments:
Post a Comment