பண்டாரவன்னியன், கைலாய வன்னியன் மாதிரி கிராமங்கள் திறந்து வைப்பு -
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பண்டார வன்னியன் மற்றும் கைலாய வன்னியன் மாதிரி கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரி கிராமங்களை திறந்து வைக்கும் வைபவம் நேற்று காலை 8.30 மணிக்கு மல்லாவி வடகாட்டுப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
மாந்தை கிழக்கு வடகாட்டுப்பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பண்டார வன்னியன் மாதிரி வீட்டுத்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கான வீடுகளும், கைலாய வன்னியன் வீட்டுத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 பயனாளிகளுக்கான வீடுகளையும் அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைத்துள்ளதுடன் மக்களிடம் கையளித்துள்ளார்.
இந் நிகழ்வின் போது முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 350 பேருக்கு மூக்குக்கண்ணாடிகளும் 300 பேருக்கு வட்டியில்லா கடனும் அமைச்சர் வழங்கி வைத்துள்ளார்.
இதில் வரவேற்புரையினை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ஆற்றியதுடன், சிறப்பு விருந்தினர் உரையினை வடமாகாண பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கருணாதாஸ் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். சிறப்புரையினை முதன்மை விருந்தினர் அமைச்சர் சஜித் பிரேமதாச நிகழ்த்தியுள்ளார்.
பண்டாரவன்னியன், கைலாய வன்னியன் மாதிரி கிராமங்கள் திறந்து வைப்பு -
Reviewed by Author
on
October 06, 2018
Rating:
Reviewed by Author
on
October 06, 2018
Rating:


No comments:
Post a Comment