சிலை உடைப்புக்கள் நல்லிணக்கத்தை சீர்குலைக்க இடம் அழிக்க கூடாது ....அருட்பணி செ.அன்ரன் அடிகளார்
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான
பல்வேறுபட்ட மத மற்றும் இனத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு வெள்ளி கிழமை19-10-2018 மாலை 4.30 மணியளவில் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மடு வட்டக்கண்டல் பாடசாலை பொதுமண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வுக்கு மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் அழைப்பை ஏற்று கொழும்பு மறை மாவட்டத்தை சேர்ந்த மும் மத மற்றும் சிங்கள மக்கள் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டார்.
இவர்களுடன் இணைந்து குறித்த நிகழ்வில் வட்டக்க்கண்டல் பிரதேசத்தை சோர்ந்த மக்கள் வாழ்வுதய நிறுவன ஊழியர்கள் அரச ஊழியர்கள், மற்றும் ஏனைய சர்வ மத பிரதிநிதிகழும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள கொழும்பு மாவட்டத்தில் இருந்து வருகைதந்த சிங்கள மக்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறித்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனம் தொரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டும் உடைக்கப்படும் வருகின்ற நிலையில் மத தலைவர்களிடமும் மக்களிடமும் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மத நல்லிணக்கமானது சிதைவடைய கூடிய வாய்ப்பு காணப்படுகின்ற படியினால் இவ்வாறான சிலை உடைப்புக்கள் நல்லிணக்கத்தை சீர்குலைக்க இடம் அழிக்க கூடாது எனவே நல்லிணக்கத்திற்கான இவ்வறான செயற்பாடுகள் அவசியம் எனவும் தொடர்ச்சியாக இவ்வறான மத நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்
அத்துடன் இன்றைய நிகழ்வுக்கு வருகை தந்த சிங்கள மக்கள் அனைவரும் இங்கு வாழும் மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டும் எனவும் 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையை அறிய முயற்சியுங்கள் அவ்வாறு அறிவதன் மூலமே உண்மையான சமாதானத்தையும் சகவாழ்வையும அடையமுடியும் எனவும் தெரிவித்தார்.

சிலை உடைப்புக்கள் நல்லிணக்கத்தை சீர்குலைக்க இடம் அழிக்க கூடாது ....அருட்பணி செ.அன்ரன் அடிகளார்
 
        Reviewed by Author
        on 
        
October 20, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 20, 2018
 
        Rating: 








No comments:
Post a Comment