இலங்கையில் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்கள்!
பேராசிரியரும் தமிழ் ஆர்வலருமான ராமு மணிவண்ணன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
தற்போது ஆய்வு முடிந்துள்ள நிலையில், தமிழகம் திரும்பிய அவரிடம் தனியார் செய்தி ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.
அதில் போர் நடந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அங்கிருக்கும் தமிழ் இளைஞர்களின் நிலை என்ன என்று கேட்ட போது, யாழ்ப்பாணம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் வாழும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்குள் போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழ் மக்களின் மிகப்பெரிய அடையாளம் கல்விதான். தமிழ் மக்களின் கல்வி, கல்விக்கூடங்களிலேயே அழிக்கப்படுகிறது. தமிழ் மக்களின் கல்வி நிலை தற்போது மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
அங்கிருக்கும் பெண்களின் நிலை குறித்து கேட்ட போது, கணவனை இழந்த பெண்களின் நிலை தான் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் 90,000-க்கு அதிகமாகவும், கிழக்கு மாகாணத்தில் 37000-க்கு அதிகமாகவும் கணவனை இழந்த பெண்கள் உள்ளனர்.
வடக்கு, தெற்கு மாகாணத்தில் மட்டும் சுமார் ஒன்றே கால் லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.
அவர்கள் கணவன், தந்தை, சகோதரன் இப்படி எந்த உறவுமின்றி தவிக்கின்றனர். ராணுவ குடியிருப்புகள், சிங்கள குடியிருப்புகள், வேலையில்லாமல், கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளால் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் கடன் தொல்லையாள் தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் அங்கு நிலவுகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், மத்திய அரசுக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளுக்கும் முன்பாக வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் ஈழப்பெண்கள்!
Reviewed by Author
on
October 16, 2018
Rating:

No comments:
Post a Comment