வறுமையிலும் தமிழ் மாணவி சாதனை! மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம் -
இதன் அடிப்படையில், 6 வருடங்களுக்கு பின்னர் கமு/சது/ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவி ஒருவர் படைத்துள்ள சாதனையை கிராமமே போற்றுகின்றது.
மத்தியமுகாம் பின்தங்கிய கிராமத்தில் ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் பயின்று வருகின்ற யோகராசா திலக்சிகா என்ற மாணவியே 172 புள்ளிகளை பெற்றுள்ளார்.
கற்றலில் ஊக்கம் நிறைந்த மாணவியாக திகழ்கின்ற திலக்சிக்கா ஆரியர்களுக்கு கீழ்ப்படிவான மாணவியும் கூட இதுவே மாணவியின் வெற்றியின் ரகசியம் என்று வித்தியாலய அதிபர் க.கதிரைநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கற்பித்த ஆசிரியர் சக ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் மக்கள் சேவகியாக திகழ்வதே எனது இலக்காகும் என்று யோகராசா திலக்சிகா குறிப்பிட்டுள்ளார்.
வறுமையிலும் தமிழ் மாணவி சாதனை! மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம் -
Reviewed by Author
on
October 06, 2018
Rating:
Reviewed by Author
on
October 06, 2018
Rating:


No comments:
Post a Comment