ஓர் இனப் படுகொலையாளியை பிரதமராக்கி ஐ.நாவைக் கேலிக்கூத்தாக்கியுள்ளார் மைத்திரி!
ஓர் இனப் படுகொலையாளியை பிரதமராக்கியதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேலிக்கூத்தாக்கியுள்ளார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐ.நா தனது செயற்பாடுகளை இலங்கைக்கு மாற்றி வருகின்றது என தெரிவித்து வந்துள்ளது.
எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது.
மைத்திரியின் தற்போதைய நடவடிக்கை மூலம், நாங்கள் தெரிவித்து வந்த விடயம் உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது.
ஓர் இனப்படுகொலையாளியை பிரதமராக நியமித்துள்ளதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேலிக் கூத்தாக்கியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பெரும்பான்மையினத்தவர் தலைவர்கள் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
ஓர் இனப் படுகொலையாளியை பிரதமராக்கி ஐ.நாவைக் கேலிக்கூத்தாக்கியுள்ளார் மைத்திரி!
Reviewed by Author
on
October 29, 2018
Rating:

No comments:
Post a Comment