விஜய்காந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரும் பொக்கிஷம்!
தமிழ் சினிமாவில் புரட்சி செய்த விஜயகாந்தை யாராலும் மறக்க முடியாது. இன்னும் அவருடைய படங்களை பார்த்தாலும் புதிது தான். கடந்த சில ஆண்டுகளாக முழுமையான அரசியலில் இறங்கிவிட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அண்மையில் தான் அவர் சென்னை திரும்பினார். தன் குடும்பத்துடன் அவர் விருகம்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது அவர் காட்டுக்கப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறாராம். அவரின் குடும்பத்தினர் பெரும் சொத்தாக கருதுவது அவர் வளர்க்கும் கன்றுவும் பசுவும் தான்.
மாட்டுப்பொங்கல் அன்று அவர் அந்த உயிரினங்களுக்கு பூஜை செய்த புகைப்படம் கூட மிகவும் ட்ரெண்டானது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். புதுவிட்டில் கட்டப்பட்டிருந்த அந்த பசுவையும், கன்று குட்டியையும் மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்துள்ளதால் குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
விஜய்காந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரும் பொக்கிஷம்!
Reviewed by Author
on
October 13, 2018
Rating:

No comments:
Post a Comment