சிறுவர்கள் மோதிக்கொண்ட குத்துச்சண்டைப் போட்டி: 13 வயது சிறுவன் அதிர்ச்சி மரணம் -
தாய்லாந்தில் சிறுவர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் ஈடுபடுவது சாதாரண நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் சிறுவர்களுக்கு கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அனுச்சா தாசாகோ எனும் 13 வயது சிறுவன் ஒருவன் குத்துச்சண்டை போட்டியில் ஈடுபட்டான். அவனுடன் மோதிய மற்றொரு சிறுவன் ஆக்ரோஷமாக அனுச்சாவை தாக்கினான்.

இதனால் அனுச்சாவின் தலையில் பலத்த அடிபட்டதால், மூளை பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் அனுச்சாவும் அவனுடன் மோதிய சிறுவனும் தலைக்கவசம் எதுவும் அணியவில்லை.
இதன் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தனது 8 வயதில் இருந்து குத்துச்சண்டையில் ஈடுபட்டு வந்த அனுச்சா, 170 போட்டிகளில் பங்கேற்றிருந்தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அனுச்சாவின் மரணத்தால், சிறுவர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் ஈடுபடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே, அந்நாட்டு அரசு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க கூடாது எனும் சட்டம் குறித்து நீண்டகாலமாக ஆலோசித்து வந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பின் அச்சட்டம் விரைவில் இயற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெற்றோர்கள் பணம் கிடைக்கும் என்பதால் சிறுவர்களை குத்துச்சண்டையில் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் மோதிக்கொண்ட குத்துச்சண்டைப் போட்டி: 13 வயது சிறுவன் அதிர்ச்சி மரணம் -
Reviewed by Author
on
November 16, 2018
Rating:
No comments:
Post a Comment