உலகை பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான சொகுசு ஹோட்டல்:-
சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு அருகே பழைய குவாரிகளைப் புதுப்பித்து, கொட்டும் அருவி நீர்களுக்கு நடுவே நிலத்தடியிலிருந்து நிலத்தின் சம பரப்புவரை 330 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது பிரமாண்ட 'ஷாங்காய் வொண்டர் லாண்ட்.
இந்த ஹோட்டல், சீனாவின் ஹாங்கியோ விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் 'சேஷன்' என்ற மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

மொத்தம் 17 தளங்களில் பால்கனியுடன்கூடிய 337 அறைகள் சுற்றி நீர்நிலையுடன் பசுமையான சூழல் மற்றும் விருந்தினர்கள் அறை, உணவகம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிலையம், நீச்சல் குளம், செயற்கை அருவி என விருந்தினர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சூரிய மின்சக்திக்கு உட்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களே பயன்படுத்தப்பட உள்ளனர். சுற்றி நீர்நிலை என்பதால் மழை, வெள்ளம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பிரத்தியேகமாகக் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகை பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான சொகுசு ஹோட்டல்:-
Reviewed by Author
on
November 18, 2018
Rating:
No comments:
Post a Comment