இராணுவ புலனாய்வாளர்களின் கெடுபிடிக்குள் தமிழ் இளைஞர்கள்
இந்நிலையில், மாவீரர் நாள் வேலைகளை மேற்கொள்ளும் நபர்கள் இராணுவ புலனாய்வாளர்களாலும் அவர்களது கைக்கூலிகளாலும் கண்காணிப்பு மற்றும் மிரட்டல்களுக்கு ஆளாகிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதன் ஓர் வடிவமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் பணிகளை மேற்கொண்ட இளைஞர்கள் இராணுவ புலனாய்வு கைக்கூலி ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
காஞ்சிரங்குடா பகுதியில் உள்ள ஒருவர் நேற்று இரவு 09:30 மணிக்கும் இன்று காலை 11:30 மணிக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு மாவீரர் துயலுமில்லத்திற்கு நுழைய வேண்டாம் எனவும் நுழைந்தால் தகுந்த சன்மானம் தருவதாக உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.
அதனை போன்று அன்று இரவு 10.00 மணியளவில் மற்றுமொரு தொலைபேசி அழைப்பின் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6.00 மணியளவில் மாவீரர் துயிலுமில்ல பணியினை மேற்கொண்ட இன்னுமோர் நபருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு தகுந்த பாதுகாப்புடன் வந்து அந்த நபரை சுட்டுவிட்டு செல்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை போன்றே கடந்த வாரமும் மாவீரர் துயிலுமில்லத்தில் பணிபுரிந்த மக்களின் புகைப்படங்கள் மேற்குறிப்பிட்ட இராணுவ கைக்கூலிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டு இலங்கை இராணுவ புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு இராணுவ புலனாய்வாளர்களால் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வாளர்களின் கெடுபிடிக்குள் தமிழ் இளைஞர்கள்
Reviewed by Author
on
November 24, 2018
Rating:

No comments:
Post a Comment