அண்மைய செய்திகள்

recent
-

மழையினால் பெரும்பாதிப்புக்கள் தவிர்க்கப்பட்டன-மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன்


கடந்த சில தினங்களாக மன்னார் பகுதியில் ஏற்பட்ட மழை மற்றும் மழை
வெள்ளத்தால் மன்னார் பகுதி பெரும் பாதிப்புகளுக்கு ஏற்படாதபோதும்
ஆங்காங்காங்கே  சிறு சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக மன்னார் மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் இவ்வாறு
தெரிவித்தார்.

மன்னார் பகுதியில் கடந்த சில தினங்களாக மன்னார் பகுதியில் நிலவிய தொடர் மழையினால் மன்னார் பகுதி பாரிய அனர்த்ததுக்கு உருவாகுமோ என்ற அச்சம் இருந்தபோதும் ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்னேற்பாடுகள் அறிவுரைகளால் மக்களுக்கு பெரும்பாதிப்புக்கள் இடம்பெறவில்லை எனவும்

இருந்தபோதும் மடு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் கொண்ட ஒரு வீடு பாதிப்புக்குள்ளாகியதாகவும் வைரவபுளியங்குளம் பகுதியில் குளம் ஒன்று உடைக்கப்பட்டதுடன் இதை உடன் புனரமைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிதியிலிருந்து ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டு அவற்றை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் பாலியாறு பகுதியில் 110 நபர்கள் கொண்ட 32 குடும்பங்கள் மழை
வெள்ளத்தால் இடம்பெயர்ந்தபோதும் தற்பொழுது இவர்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பியுள்ளதாகவும்

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் சூரியக்கட்டடைக்காடு பகுதியில் ஒரு சிறிய குளம் உடைப்பெடுத்தபோதும் இங்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லையெனவும் அத்துடன் இப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் இப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாதிருக்க தேங்கியிருக்கும் மழை நீரை உடன்
வெளியேற்றுவதற்கான வடிகால் அமைப்பை மேற்கொள்வதற்காக நிதி உதவியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏதிர்காலத்தில் மழை மற்றும் மழை நீரால் பொது மக்கள்
பாதிப்புக்குள்ளாதிருக்க தொடந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை
முன்னெடுத்து வருவதாகவும் தொடந்து பாதிப்புக்குள்ளாகும் இடங்களை இனம் காணப்பட்டு வருவதாகவும் மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் இவ்வாறு மேலும் தெரிவித்தார்.

மழையினால் பெரும்பாதிப்புக்கள் தவிர்க்கப்பட்டன-மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன் Reviewed by Author on November 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.