கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ.தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை 4.30 மணிக்கும் இரவு 9.00 மணிக்கும் இடையில் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும். கஜா புயல் கரையைக் கடக்கும் போது இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தெல்லிப்பளை, பருத்தித்துறை, மருதங்கேணி கண்டாவளை, கரைதுறைப்பற்று வேலணை, சங்கானை ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும். உட்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். சில நேரங்களில் காற்று 90 கி.மீ. வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு.
நாளை காலை முதல் மழைபுயல் பொழிவு இருக்கும். ஆரம்பத்தில் தூறலுடன் இருந்தாலும் பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்புண்டு. 16 மற்றும் 17-ம் தேதிகளிலும் இடையிடையே மழை தொடரும்.
சில சமயங்களில் கரையைக் கடக்கும் போது கஜா வலுவிழந்த புயலாக மாறினால் கனமழை கிடைக்கும் அத்துடன் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். அன அந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
Reviewed by Author
on
November 15, 2018
Rating:
Reviewed by Author
on
November 15, 2018
Rating:


No comments:
Post a Comment