கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க என்னென்ன சாப்பிட வேண்டும்? -
மேலும் இந்த கல்லீரல் நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மூலம் எப்ப்டி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
புளி
புளியில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் அன்சேச்சுரேட் கொழுப்புகள் கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிறந்தது. மேலும் புளியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நற்பண்புகள் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.மேலும் தினமும் 30 கிராம் புளியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற அந்த தண்ணீரை தினமும் 3 கிளாஸ் குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் விட்டமின் சி சிட்ரிக் அமிலம் போன்றவை அதிகம உள்ளதால் இதன் சாற்றை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம் கல்லீரல் கொழுப்பை நீக்கலாம்.மேலும் இதன் அமில தன்மை கல்லீரலை பாதுகாக்கிறது.பேரிக்காய்
தினமும் 2 பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான 20% விட்டமின் சி, 10%போலிக் அமிலம், விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் விட்டமின் ஈ போன்றவைகள் கிடைப்பதால் இவை கணையம் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள்
முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள் கல்லீரல் செயல்பாடுகளாவன பித்தநீர் சுரப்பு, உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும் விட்டமீன்களை உறிஞ்சுதல், நச்சுக்களையும் தேவையற்ற கொழுப்புகளையும் நீக்க உதவி செய்கிறது.மேலும் தினமும் 2 துண்டுகள் முலாம்பழம் மற்றும் 2 பப்பாளி விதைகள் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து இந்த பானத்தை வடிகட்டாமல் அப்படியே குடித்தால் கல்லீரல் சுத்தமாகி விடும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பை பாதுகாப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு கல்லீரலை சுத்தம் செய்யவும் உதவுகின்றன.காய்கறிகள்
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பச்சை காய்கறிகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும் காரணத்தால் காய்கறிகளை எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க என்னென்ன சாப்பிட வேண்டும்? -
Reviewed by Author
on
November 09, 2018
Rating:

No comments:
Post a Comment