நாளைய தினம் நாடாளுமன்றத்தை கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு -
பரபரப்பான சூழ்நிலையில் நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற கலைகப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்று இன்று பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தங்கள் கட்சி இணங்குவதாகவும், தேர்தலுக்கும் தயாராக இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டரீதியானதென சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் நாடாளுமன்றத்தை கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு -
 Reviewed by Author
        on 
        
November 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 13, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 13, 2018
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment