கொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு -
அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் எந்த பொறுப்பையும் ஏற்க தயார். அத்துடன், தற்போதை கட்சியின் தலைவர் மற்றும் ஏனையவர்கள் ஆதரிப்பார்களான இருந்தால் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன்.
எவ்வாறாயினும், கட்டு சட்டங்களை பின்பற்ற தான் ஒருபோதும் தயாராக இல்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர்கள் கோரிவருகின்றனர்.
அவ்வாறு தலைமைப் பதவியில் மாற்றம் செய்தால் மீண்டும் இணைந்து செயற்பட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவருகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருக்கதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அரசியல் குழப்பமான சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவின் இவ் அறிவிப்பு அரசியல் ரீதியில் பலரை திண்டாட வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
கொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:
Reviewed by Author
on
November 13, 2018
Rating:


No comments:
Post a Comment