தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி: சம்பந்தன் நேரடிப் பேச்சு -
வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.இது தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது,
"அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் உரிய வகையில் தீர்வு காண இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார். இந்த விடயம் தாமதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டார்.
கால சூழலுக்கு ஏற்ப விரைவில் தீர்வு காணுவேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படுங்கள் என்று அவரிடம் கூறினேன்." என்று சம்பந்தன் இதன் போது தெரிவித்திருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி: சம்பந்தன் நேரடிப் பேச்சு -
Reviewed by Author
on
November 09, 2018
Rating:

No comments:
Post a Comment