சற்று முன் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு - பாடசாலைகளுக்கு விடுமுறை!
வட மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வட மாகாண ஆளுநர் சற்று முன்னர் அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த கஜா புயல் இன்று பின்னிரவு 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் யாழில் கஜா புயலின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழகத்திலும் பாரிய பாதிப்புக்களை கொடுத்துள்ள கஜா புயலின் நகர்வு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வடக்கு ஆளுநர் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
சற்று முன் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு - பாடசாலைகளுக்கு விடுமுறை!
Reviewed by Author
on
November 16, 2018
Rating:
Reviewed by Author
on
November 16, 2018
Rating:


No comments:
Post a Comment