அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர்கள்: வெளியான புதிய அறிக்கை -


சுவிட்சர்லாந்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெடரல் உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் சதவிகிதம் சரிவடைந்துள்ளதாகவும் உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
வியாழனன்று வெளியான பெடரல் உளவுத்துறையின் அறிக்கையின்படி பயங்கரவாதிகள் தொடர்புடைய 606 சுவிஸ் நாட்டவர்கள் பெடரல் உளவுத்துறையின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது கடந்த மே மாதம் 585 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மேலும் சுவிட்சர்லாந்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை 80-ல் இருந்து 90 என அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து 93 பேர் புறப்பட்டு சென்று அந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் 78 பேர் சிரியா அல்லது ஈராக் நாட்டுக்கும், 15 பேர் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் சென்றுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி இந்த 78 ஜிஹாதிகளில் 33 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் சுவிட்சர்லாந்துக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் புதிதாக எவரும் ஜிஹாதி குழுக்களில் இணைந்துள்ளதாக எந்த தகவலும் இல்லை என உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்று பயங்கரவாதிகளால் சுவிட்சர்லாந்துக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாகவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர்கள்: வெளியான புதிய அறிக்கை - Reviewed by Author on November 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.