இடைநிறுத்தப்பட்ட தலைமன்னார் பியர் கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்.
மன்னாரில் புகையிரத பாதை புனரமைப்பு காரணமாக இடைநிறுத்தப்படடிருந்த மன்னாருக்கான புகையிரத சேவை மூன்று மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது.
சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தலைமன்னார் கொழும்பு புகையிரத சேவை கடந்த 17.08.2018 முதல் சுமார் மூன்று மாதங்களாக இடை நிறுத்தப்பட்டு இவ் சேவையானது கொழும்பு மதவாச்சி வரைக்குமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
மன்னார் பகுதியிலுள்ள புகையிதைப் பாதையில் புனரமைப்பு வேலைகள்
நடைபெற்றுக் கொண்டிருந்தமையாலே இவ் தலைமன்னார் கொழும்பு புகையிரத சேவை மதவாச்சி வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இவ் சேவை இடை நிறுத்தப்பட்டு கொழும்பிலிருந்து மதவாச்சி வரைக்கும்
மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் இப் பகுதியிலிருந்து ரயில் பிரயாணிகளின்
நலன் கருதி ரயில்வே திணைக்களம் இலங்கை போக்குவரத்து சபை மன்னார்
சாலையுடன் இணைந்து ரயில் இணைப்புச் சேவையை நடாத்தி வந்தது.
ஆனால் தற்பொழுது இடைநிறுத்தப்பட்ட கொமும்பு தலைமன்னார் புகையிரத
சேவையானது வழமைபோன்று மீண்டும் நேற்று வியாழக் கிழமை (01.11.2018) இரவு முதல் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைநிறுத்தப்பட்ட தலைமன்னார் பியர் கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்.
Reviewed by Author
on
November 01, 2018
Rating:

No comments:
Post a Comment