கூட்டமைப்பு உடந்தையாக இருக்கின்றது! மைத்திரி தரப்பு கடுமையான குற்றச்சாட்டு -
வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்லும் சதித்திட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது என சிறிலங்கா சுதந்திர கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்த கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வைபெற்றுக்கொடுக்க ஜனாதிபதியே முன்னின்று செயற்படுகின்றார் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிந்துகொள்ளவேண்டும்.
வடக்கு மக்களின் காணிப்பிரச்சினை, அங்கு நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்றுதல் மற்றும் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதமாக மேற்கொண்டு வருகின்றார்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து நாட்டு நிலைமை தொடர்பாக பேசியிருந்தனர்.
இதன் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய அரசியல் பிரச்சினையானது.சர்வதேசத்துக்கு தெரிவிக்கவேண்டிய அளவுக்கு ஒன்றுமில்லை.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பான பிரச்சினையே தற்போது இருக்கின்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தப்படாமல் இருக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு உடந்தையாக இருக்கின்றது! மைத்திரி தரப்பு கடுமையான குற்றச்சாட்டு -
Reviewed by Author
on
November 22, 2018
Rating:
Reviewed by Author
on
November 22, 2018
Rating:


No comments:
Post a Comment