இலங்கை மக்கள், சரியான பாடம் புகட்ட வேண்டும்! பிரித்தானிய தூதுவர் ஆதங்கம் -
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
Voters across #SriLanka elected Members of Parliament to do an important job. But today Sri Lankans have again seen deplorable behaviour by some MPs, unbecoming of them and of their noble institution. No parliament can perform its role when its own members stop it from doing so.— James Dauris (@JamesDauris) November 16, 2018
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கியமான பணிகளை ஆற்றுவதற்காகவே இவர்களை மக்கள் தெரிவு செய்தததாகவும் நினைவுபடுத்தியுள்ளார்.
இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்றத்திற்கும் உரிய வகையில் மதிப்பு கொடுக்கும் விதமாக செயற்படவில்லை.
நாடாளுமன்றம் செயற்படுவதை அதன் உறுப்பினர்களே தடுத்தால், எந்த நாடாளுமன்றமும் இயங்க முடியாது என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள், சரியான பாடம் புகட்ட வேண்டும்! பிரித்தானிய தூதுவர் ஆதங்கம் -
Reviewed by Author
on
November 17, 2018
Rating:

No comments:
Post a Comment