அண்மைய செய்திகள்

recent
-

உலகில் இடம்பெற்ற மனித படுகொலைகளுடன் கனேடிய பாராளுமன்றில் எதிரொலித்த ஈழத் தமிழர் படுகொலை -


அனைத்துலக மனிதவுரிமை தினத்தை நினைவு கூரும் வகையில் கனடிய நாடாளுமன்றத்தில் திரு அவையின் பங்களிப்போடு கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது.

வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களால் சின்னாபின்னமாக்கப்பட்ட சமூகங்களில் நீதியையும், மன அமைதியையும், புதுப்பித்தலையும் ஏற்படுத்தவும், இழப்பீடுகளையும் கணக்குக்கூறலையும் நிலைநாட்டும் நோக்கத்தோடு இந்த கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்குபற்றிய ஆய்வாளர்கள் யூதர்களுக்கு ஐரோப்பாவிலும், இலங்கையிலும், ஆர்மேனியாவிலும், கிரீசிலும் இடம்பெற்ற யுத்த குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள்.
இந்த கருத்தரங்கு கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஐனியூஸ் ஏற்பாட்டில் திரு அவையின் ஆதரவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை பற்றி அருட்பணி பேணாட் அடிகளாரும், ஆர்மீனியன் மறைமாவட்டத்தின் சார்பில் 100 ஆண்டுகளுக்கு முன் ஆர்மீனியர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை பற்றி லெவோன் இசுக்கான்யனும், கிரேக்க நாட்டின் கனடாவின் தூதுவர் டிமெறிற்றிஸ் அசுமொபொலுஸ் கிரேக்க மக்களுக்கு நடந்த இன ஆழிப்பையும் யூதருக்கு நடந்த இனப்படுகொலையையும் பற்றி எலி பொஒலிகிரப்பும் கருத்துகளை பகிர்ந்தனர்.

பேணாட் அடிகளார் தமது உரையில் இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராய் நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி ஆதாரங்களுடன் விபரித்தார்.
மன்னிப்பு பற்றி தவறான கருத்தை நாம் அகற்றிக் கொள்ள வேண்டும். மறப்பதை பொருட்படுத்தாமல் இருப்பது மன்னிப்பு அல்ல. மன்னிப்பற்கு முன் யுத்த குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அதைப் புரிந்தவர்கள் மனித சமுதாயத்தின் முன்னர் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆர்மீனியர்களை பொறுத்த வரை இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் ஒரு அரசாகும் (துருக்கி), அவர்கள் 100 ஆண்டுகள் சென்றும் இனப்படுகொலையைச் புரிந்ததாக ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை என்பது மிகவும் ஏமாற்றமாகும்.
கிரேக்க நாட்டின் கனடாவின் தூதுவர் டிமெறிற்றிஸ் அசுமொபொலுஸ் தமது உரையில் உண்மையை ஏற்றக் கொள்ள வைப்பது பழிவாங்குவதற்காக அல்ல என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

உண்மைக்கு ஆதரவளிப்பது இறைவனுக்கு ஆதரவளிப்பதாகும். இக்கருத்தரங்கிற்கு முன்னர் ஓற்றவா உயர் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் திருப்பலியும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
உலகில் இடம்பெற்ற மனித படுகொலைகளுடன் கனேடிய பாராளுமன்றில் எதிரொலித்த ஈழத் தமிழர் படுகொலை - Reviewed by Author on December 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.