அருகிவரும் பாரம்பரிய போசாக்கு உணவு கண்காட்சி! -
அருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையிலும் நஞ்சற்ற உணவுகள் தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் வகையிலும் அருகிவரும் பாரம்பரிய போசாக்கு உணவு கண்காட்சி இன்று பகல் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
குறித்த கண்காட்சி இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வேள்ட்விசன் ஊடாக கிராமிய உணவு விற்பனையில் ஈடுபடுவோரை ஒருங்கிணைத்து இந்த கண்காட்சி நடாத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் இந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இந்த கண்காட்சியில் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 50க்கும் மேற்பட்ட கிராமிய உணவுகள் இதன்போது கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அருகிவரும் பாரம்பரிய போசாக்கு உணவு கண்காட்சி! -
Reviewed by Author
on
December 14, 2018
Rating:

No comments:
Post a Comment