ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கம் -
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஓ.ராஜா இன்று காலை தேர்வான நிலையில், அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை-குறிக்கோகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக ஜெயலலிதாவால் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/hB4dVUPBNa— O Panneerselvam (@OfficeOfOPS) December 19, 2018
ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கம் -
Reviewed by Author
on
December 20, 2018
Rating:
No comments:
Post a Comment