தமிழர்கள் அமைதியை விரும்பாவிட்டால் இதனை செய்யவேண்டி வரும்: யாழ்.கட்டளைத் தளபதி -
வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
சிங்கள மக்களுக்கும் சரி இராணுவத்திற்கும் சரி தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விருப்புகின்றனர். யுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் நட்புடன் வாழ்ந்தார்கள்.
யுத்த காலத்தில் துன்பட்ட தமிழ் மக்களின் வாழ்வினை இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும். எனவே தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறே தொடர்ந்து அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என.
இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், காவல் துறையை சேர்ந்தவர்களும் . இராணுவத்தினரும் வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து வீதியில் செல்வோரை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும். அதனால் இந்த அமைதியான வாழ்வை வாழ வேண்டும்.
அதேபோல இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தமிழர்கள் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதியை யாராவது ஒருவர் குலைக்க விரும்பினால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தைரியம் கொடுக்காது அவர்களை வலுவிழக்க செய்து இந்த நாட்டின் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கூறுவதை நம்புங்கள். நான் எனது மனதில் தோன்றுவதனை சொல்கிறேன். அதனால் நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம்.
இராணுவத்தினர் ஆகிய நாம் இந்த வேலை திட்டத்தை மேற்கொண்டு, எதிர்காலத்தில் அரசியல் நோக்குடன் வாக்கு கேட்டு இந்த வேலை திட்டங்களை செய்யவில்லை.
யாழில் வாழும் தமிழர்கள் அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழர்கள் அமைதியை விரும்பாவிட்டால் இதனை செய்யவேண்டி வரும்: யாழ்.கட்டளைத் தளபதி -
Reviewed by Author
on
December 02, 2018
Rating:
Reviewed by Author
on
December 02, 2018
Rating:


No comments:
Post a Comment