மகிந்த எதிர்க்கட்சி தலைவரானது பிரச்சினை இல்லை! சம்பந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதுதான் பிரச்சினை. அவர் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்வதில் பிரச்சினை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையை நிலைநிறுத்துகின்ற தீர்மானமாக இதனைக் கருதுகின்றேன் என்றும் கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த எதிர்க்கட்சி தலைவரானது பிரச்சினை இல்லை! சம்பந்தன்
Reviewed by Author
on
December 19, 2018
Rating:

No comments:
Post a Comment