சாதனை படைத்த மல்லாவி மாணவியை பாராட்டுங்கள்!!
ஆசிய இளையோருக்கான பளுதூக்கும் போட்டியில் 90 கிலோ எடை பிரிவில் சாதனை படைத்த மல்லாவி மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
செல்வபுரம், வடக்கு வவுனிக்குளத்தை சேர்ந்த மல்லாவி மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 9இல் கல்விகற்று வரும் தேவராசா தர்சிகா என்னும் மாணவியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பளுதூக்கும் பிரிவில் 90 கிலோ எடையை தூக்கி சர்வதேச சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மாணவியின் சாதனையை பாராட்டும் வகையில் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் போ.ரவிச்சந்திரன் தலைமையில் இன்றைய தினம் முல்லைத்தீவில் பாராட்டுவிழா நடைபெற்றுள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ்வாழும் குறித்த மாணவியின் சாதனையை பலரும் பாராட்ட வேண்டியது நமது கடமை என பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் குறித்த மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்யவிட்டாலும் அவரை பாராட்ட வேண்டியது தமிழ் மக்களின் கடமை என ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சாதனை படைத்த மல்லாவி மாணவியை பாராட்டுங்கள்!!
Reviewed by Author
on
December 13, 2018
Rating:
Reviewed by Author
on
December 13, 2018
Rating:


No comments:
Post a Comment