அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதல் எக்ஸ்ரே: தற்செயலாக நிகழ்ந்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு -


1985ஆம் ஆண்டு உலகின் முதல் எக்ஸ்ரே, மனித உடலில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே கண்டுபிடிக்கப்பட்டது, அதுவும் யார் அதை கண்டுபிடித்தாரோ அவரது மனைவியின் கையிலேயே அது எடுக்கப்பட்டது.
பின்னர் மருத்துவ உலகில், நோய் கண்டுபிடிப்பு பிரிவில், அது ஒரு பிரமாண்ட கண்டுபிடிப்பாக இடம்பெற்றது.

தனது கையின் எக்ஸ்ரேயைக் கண்ட Anna Bertha Roentgen அதிர்ச்சியடைந்து எனது மரணத்தைப் பார்த்து விட்டேன் என்று கூறினாராம்.
அதே ஆண்டில், நவம்பர் மாதம் 8ஆம் திகதி அவரது கணவரும் ஜேர்மன் இயற்பியலாளருமான Wilhelm Conrad Roentgen, குறைந்த அழுத்தத்தில், வாயுக்கள் வழியாக மின்சாரத்தை செலுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு விடயம் அவர் கண்ணில் பட்டது.

அவரது கருவிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட பிளேட்டுகள் ஒளிரத் தொடங்கின.
அந்த கண்ணாடிக் குழாயிலிருந்து வரும் கதிர்கள்தான் அதற்கு காரணம் என்பதை அறிந்து கொண்டார் அவர்.
திடப்பொருட்கள் வழியாக ஊடுருவிச் செல்லும் அந்த கதிர்கள் புகைப்பட காகிதத்தில் படும்போது, நிழல் போன்ற உருவங்களை ஏற்படுத்துவதை அவர் கண்டார்.

அவைதான் எக்ஸ் கதிர்கள், கணிதத்தில், என்ன என்று தெரியாத ஒரு விடயத்தை எக்ஸ் என்று குறிப்பிடுவதால், தான் கண்டுபிடித்த என்ன என்று தெரியாத கதிர்களுக்கும் அவர் எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார்.
1896ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி Roentgenஇன் அந்த புகழ் பெற்ற படம், தனது மனைவியின் கை எலும்புகளை காட்டும் அந்த படம், மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
Roentgenஇன் கண்டுபிடிப்பு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்காக உலகின் முதல் நோபல் பரிசை அவருக்கு பெற்றுத் தந்தது.



உலகின் முதல் எக்ஸ்ரே: தற்செயலாக நிகழ்ந்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு - Reviewed by Author on December 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.