இரட்டை சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் கேப்டன்.. 45 ஆண்டுகளுக்கு பின் தரவரிசையில் முதலிடம்
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் விளாசினார். இதன்மூலம் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த ஷகிப் அல் ஹசன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2வது இடத்தில் இருந்த ஜடேஜா 3வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
கடந்த 1974ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் கேரி சோபர்ஸ், ஐ.சி.சி தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அதன் பிறகு 45 ஆண்டுகளுக்கு பிறகு ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரட்டை சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் கேப்டன்.. 45 ஆண்டுகளுக்கு பின் தரவரிசையில் முதலிடம் 
 
        Reviewed by Author
        on 
        
January 30, 2019
 
        Rating: 
      

No comments:
Post a Comment