வருமானம் கிடைத்தும் வீதி புணரமைக்க படவில்லை பொது மக்கள் விசனம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பைகடவை ஆத்திமோட்டை,கூராய் போன்ற பகுதிகளில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான உள்ளக வீதிகளின் நிலமை மிக மோசமாக காணப்படுவதாகவும் பிரதேச சபை தவிசாளர் பாரா முகமாக செயற்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மிக பிந்தங்கிய நிலையில் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களான கூராய்,ஆத்திமோட்டை,இலுப்பைகடவை ஆகிய கிராமங்களின் உள்ளக வீதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது
குறித்த பகுதிகளில் இருந்து மாத்திரம் மாதம் ஒன்றுக்கு மண் அகழ்வுகளில் இருந்து மாத்திரம் 5-9 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பிரதேச சபைக்கு கிடைத்தாலும் குறித்த வீதியினை புனரமைப்பதில் பிரதேச சபை அக்கறை செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்களினாலும் மழை காரணமாகவும் வீதிகள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது
அத்துடன் குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வதாரமாக கொண்ட மக்கள் என்பதால் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை கூட கிராம பகுதிக்குள் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீதிகள் மோசமாக காணப்படுகின்றது
இவ் கிராம பகுதிகளி அதிகம் பாம்புகள் காணப்படுவதனால் பாம்புக்கடிகளோ அல்லது எந்த ஒரு மருத்துவ தேவைக்கோ குறித்த வீதிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டியுள்ளது ஆனலும் வீதி ஒழுங்கான நிலையில் இல்லமையினால்
மக்கள் மருத்துவம் மற்றும் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பிரதேச தவிசாளர் மற்றும் பிரதேச சபை குறித்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by Author
on
January 04, 2019
Rating:
Reviewed by Author
on
January 04, 2019
Rating:

No comments:
Post a Comment