அண்மைய செய்திகள்

recent
-

மூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள் -


வரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒருவரின் மூளையிலுள்ள தகவல்களை மற்றையவர்களுக்கு பரிமாற்றம் செய்து நரம்பியல் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இதற்காக Electroencephalograms (EEGs) மற்றும் Transcranial Magnetic Stimulation (TMS) ஆகிய இரு தொழில்நுட்பங்களையும் ஒருங்கே பயன்படுத்தியுள்ளனர்.
EEG இனை பயன்படுத்தி மூளையினால் உண்டாக்கப்படும் இலத்திரனியல் துடிப்புக்களை பதிவு செய்ததுடன், TMS இன் காந்தப்புலத்தினைப் பயன்படுத்தி நரம்புகளை தூண்டச் செய்துள்ளனர்.

இவ்வாறு ஒருவருடைய மூளையில் உள்ள தகவல்களை மற்றொருவரின் மூளைக்கு அனுப்பும் தொழில்நுட்பம் BrainNet என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வெற்றியானது எதிர்காலத்தில் வெவ்வேறு சிந்தனையுடைய இரு மூளைகளை ஒருங்கே இணைத்து செயற்பட வைப்பதற்கு உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள் - Reviewed by Author on January 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.