டோனி-கோஹ்லியை முந்தி சாதனை படைத்த இந்திய வீராங்கனை மிதாலி ராஜ்! எதில் தெரியுமா?
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்தப் போட்டியில் அவர் நிதானமாக விளையாடினாலும், பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் வெற்றிகரமான சேஸிங்களில் அதிக சராசரியைப் பெற்று மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். மிதாலி ராஜின் சேஸிங் சராசரி 111.29 ஆகும். இது ஆடவர் மற்றும் மகளிர் இரண்டு கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமாகும்.

மேலும், டோனியின் சராசரியான 103.07 மற்றும் கோஹ்லியின் சராசரியான 96.23ஐ விட அதிகம் என்பதால் மிகச் சிறந்த கிரிக்கெட்டராக மிதாலி ராஜ் உருவெடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக டோனியின் ஆட்டம் போலவே மிதாலி ராஜின் ஆட்டம் அதிரடியாக இல்லாததால் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் தற்போது அனைவரது விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

டோனி-கோஹ்லியை முந்தி சாதனை படைத்த இந்திய வீராங்கனை மிதாலி ராஜ்! எதில் தெரியுமா?
Reviewed by Author
on
January 31, 2019
Rating:
No comments:
Post a Comment