எளிதில் சிறுநீரக கற்களை கரைக்க வேண்டுமா? சித்த மருத்துவம் கூறும் ரகசியம் -
இதற்கு முக்கிய காரணம் கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகமானாலும் இப்பிரச்சினை ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
அந்த காலத்திலே சித்தர்கள் சிறுநீரக கற்களுக்கு சில அற்புத மூலிகைகளை தீர்வாக கூறியுள்ளனர். அவை என்னென்ன மூலிகைகள் என்பதை அறிந்து, இந்த பிரச்சினையில் இருந்து எப்படி நம்மை காத்து கொள்வோம் என்பதை பார்ப்போம்.

- சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றவும், பித்தப்பை மற்றும் ஆணுறுப்பில் உண்டாக கூடிய பிரச்சினைகள் அனைத்திற்குமே குதிரை மசால் அருமருந்தாக பயன்படுகிறதாம்.
- எலுமிச்சை சாற்றை தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் இந்த சிறுநீரக கற்களை உருவாக்கும் யூரிக் அமிலம் கரைந்து விடும். தேவைக்கும் 1 ஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளலாம்.
- சூர்நகம் அல்லது பேய் நகம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை சிறுநீரக கற்கள் முதல் மூட்டு வலி வரை குணபடுத்தும் திறன் கொண்டது.
- நெல்லி காய் போன்ற உவர்ப்பு சுவை கொண்ட செர்ரியில் சிறுநீரகத்தில் சேர கூடிய யூரிக் அமிலத்தை வெளியேற்றும் தன்மை கொண்டவை. மேலும், சிறுநீரக கற்கள் உருவாவதையும் இது தடுத்து விடுமாம்.
- வைட்டமின் சி, பச்சையம், பைட்டோ கெமிக்கல்ஸ் போன்றவை அதிக அளவில் கோதுமை புல்லில் நிறைந்துள்ளதால் தினமும் 2 ஸ்பூன் கோதுமை புல்லின் சாற்றை குடித்து வாருங்கள்.
- செந்தட்டி என்கிற மூலிகையை நீரில் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
- செலரி கீரை விதைகளை உலர வைத்து பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.
- ஆலிவ் எண்ணெய்யில் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க கூடிய தன்மையும் உண்டாம். எனவே, உணவை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டாலே போதும்.
எளிதில் சிறுநீரக கற்களை கரைக்க வேண்டுமா? சித்த மருத்துவம் கூறும் ரகசியம் -
Reviewed by Author
on
January 31, 2019
Rating:

No comments:
Post a Comment