மன்னார் மடு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தெரிவு ,,,
மன்னார் மடு பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பத்தொன்பது இளைஞர் கழகங்களை ஒன்றிணைந்து பிரதேச இளைஞர் சம்மேளனம் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது
2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் கழகங்களை தெரிவு செய்யும் பணிகள் தேசிய இளைஞர்சேவை மன்றத்தினால் இலங்கை முழுவதும் இடம் பெற்று வருகின்றது அவ் தெரிவின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தின் யுத்ததால் பாத்திக்கப்பட்ட பிரதேசமான மடு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 19 இளைஞர் கழகங்களையும் உள்ளடக்கி பிரதேச சம்மேளன தெரிவானது
மடு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ராகவன் தலைமையில் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராஜ அவர்களும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்
மரியசீலன் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் மற்றும் கிராம ரீதியான இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் 2019 ஆண்டுக்காண நிர்வாக தெரிவும் வருடத்திற்கான திட்டமிடல் நிகழ்வும் இடம் பெற்றதி குறிப்பிடதக்கது.
மன்னார் மடு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தெரிவு ,,,
Reviewed by Author
on
January 13, 2019
Rating:

No comments:
Post a Comment