அழிவின் விளிம்பில் உள்ள விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முன் வாருங்கள்-கேதீஸ்வரன்
அழிவின் விளிம்பில் உள்ள விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முன் வாருங்கள்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அழைப்பு
மாந்தை பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவும் மூத்த விவசாயிகள் மதிப்பளிக்கும் நிகழ்நிகழ்வில் இதனை தெரிவித்தார்
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் பொங்கல் விழாவும் மூத்த விவசாயிகள் மதிப்பளிக்கும் நிகழ்வும் 16-01-2019 செயலக முன்றலில் நடைபெற்றது
இன்றைய பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாந்தை பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்கள்
மாந்தை பிரதேசமானது இலங்கையின் வரலாற்றில் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுகின்ற பிரதேசமாகும் இன்றுவரை மாந்தை பிரதேசத்தின் விளைச்லசலை மிஞ்சிய இடம் எங்கும் இல்லை என்பதை அறியமுடிகிறது உழவுத் தொழிலின் மூலம் சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் நம்மை எல்லாம் வாழ வைப்பது மட்டுமல்ல அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சோறு போடுகின்ற சமூகம் அவர்களை காப்பது மதிப்பளிப்பது நம் கடமை எத்தனையோ புதிய புதிய தொழிநுட்பங்கள் வந்துவிட்டன கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு எதுவித தொழிநுட்பங்களும் இல்லாத காலத்தில் தங்களுடைய மனித வலுவை மற்றும் பயன்படுத்தி மிக சிறப்பாக விவசாயம் செய்தவர்கள் எமது மக்கள் மழை வெள்ளம் பாராமல் இரவு பகலாக பாடுபட்டு விலங்குகள் பறவைகளிடம் இருந்து பயிரை பாதுகாத்து.
தனது குழந்தையை விட அதிகமான பாதுகாப்பையும் கவனிப்பையும் பயிர் மீது விவசாயிகளால் காட்டப்படுகிறது ஒரு பிள்ளைகளின் வளர்ச்சியை விட பயிரின் வளர்ச்சியே ஒரு விவசாயிக்கு உன்னதமான மகிழ்ச்சியை தருகிறது
எவ்வளவு சுமைகள் கஷ்டங்கள் என்றாலும் கடுங்குளிரிலும் அதிகாலை வயல்களைப்பார்ப்பதில் உண்டாகும் மகிழ்ச்சி தனிப்பட்டது ஏனெனில் நான் ஒரு விவசாய குடுப்பத்தில் பிறந்த என் அனுபவம் அவை
எவ்வளவு சுமைகள் கஷ்டங்கள் என்றாலும் கடுங்குளிரிலும் அதிகாலை வயல்களைப்பார்ப்பதில் உண்டாகும் மகிழ்ச்சி தனிப்பட்டது ஏனெனில் நான் ஒரு விவசாய குடுப்பத்தில் பிறந்த என் அனுபவம் அவை
எமது நாடடுக்காகவும் நாட்டு மக்களின் பசி தீர்க்கவும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை கவனிப்பது மிகவும் குறைவு நாம் விவசாயிகளை ஒரு சாராசரி மனிதராக பார்க்கின்றோம் அது தவறு சமூகத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்
அந்த வகையில் இரண்டாவது தடவையாக நாங்கள் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கின்றோம் அதில் சிறப்பாக இரு பெண் விவசாயிகளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் நான் பார்க்கும் வகையில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக தனித்து விவசாயத்தை மேற்கொண்டு வருபவர்களையும் மதிப்பளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்த மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் விவசாயத் தொழில் அழிந்து வருகிறது விவசாயத்தில் தொழிலாளர்கள் நம்பிக்கை இழக்கும் நிலையில் உள்ளார்கள் விவசாயத்தில் போதிய வருமானம் இன்மையால் மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்
இவ்வாறான செயற்பாடு நம் நாட்டிற்கும் எதிர்கால சந்ததியினரின் வாழ்விறிகும் நல்லது அல்ல ஆகவே நாம் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் அதற்கான முயற்சிகளை அனைவரும் எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
இந்த நிகழ்வில் திருக்கேதீஸ்வரம் ஆலத்தின் பிரதம குரு கண்ணண் குருக்கள் அடம்பன் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அடம்பன் பங்குத் தந்தை
போன்றோருடன் பிரதேச செயலகத்தின் பணி யாளர்களும் கலந்து கொண்டார்கள்
இதன் போது மாந்தை பிரதேசத்தில் நீண்டகாலம் விவசாம் செய்து வந்த விவசாயிகள் மதிப்பளிக்கப்பட்டார்கள் அதில் இரண்டு பெண் விவசாயிகள் அடங்குவர்
அனைத்து நிகழ்வுகளையும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ரஞ்சனா அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அழிவின் விளிம்பில் உள்ள விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முன் வாருங்கள்-கேதீஸ்வரன்
 Reviewed by Author
        on 
        
January 17, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 17, 2019
 
        Rating: 
       
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment