10 நாட்களில் 380 கிலோ கஞ்சா வடக்கில் மீட்பு! 40 பேர் கைது -
வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாட்களில் 380 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், 40 பேர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சதவீதமானவை யாழ்ப்பாணத்திலேயே மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்தொகையான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் குறைந்தளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 29 பேரும், வவுனியாவில் 4 பேரும், மன்னாரில் 4 பேரும், கிளிநொச்சியில் 3 பேருமாக 40 பேர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 நாட்களில் 380 கிலோ கஞ்சா வடக்கில் மீட்பு! 40 பேர் கைது -
Reviewed by Author
on
February 03, 2019
Rating:
Reviewed by Author
on
February 03, 2019
Rating:


No comments:
Post a Comment