லண்டனில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! -
அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.
கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் வழக்கு விசாரணையின் பின்னர் முக்கிய சட்ட விதிகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள இப்பரிந்துரையின்படி, பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளின் கோரிக்கையை பரிசீலிக்கும் போது அவர்கள் இலங்கையில் தாம் எதிர்நோக்கும் உயிராபத்து மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக எவ்வாறான கோரிக்கையை முன்வைத்தாலும், அவர்கள் எவற்றிற்கெதிராக முறையிடுகின்றார்களோ அவர்களால் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள் என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதேவேளை, அவர்களால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை கோடிட்டுக்காட்டியுள்ளது.
சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை நிராகரிப்பதாயின் அதற்கான போதிய காரணங்களை எடுத்துக்கூற வேண்டும், தவறும் பட்சத்தில் அம்முடிவு சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இப்பரிந்துரையின்படி, உள்நாட்டு திணைக்களத்தினால் போதிய காரணம் தரப்படாமல் நிராகரிக்கப்படும் அகதி விண்ணப்பங்களை நீதிமன்றில் மேன்முறையீடு செய்து பரிகாரம் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பானது இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! -
Reviewed by Author
on
February 17, 2019
Rating:
Reviewed by Author
on
February 17, 2019
Rating:


No comments:
Post a Comment