மன்.அடம்பன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-
மன்னார்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 03-02-2019 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மடு வலயக்கல்வி பணிப்பாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் வலயகல்வி பணிமனை அதிகாரிகள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலையின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து துணை நிலை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்
விளையாட்டு நிகழ்வில் மாணவர்களினால் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுதல்கள், பதக்கம் மற்றும் வெற்றிக் கேடையங்களும் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்.அடம்பன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-
Reviewed by Author
on
February 04, 2019
Rating:

No comments:
Post a Comment